FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தைக் கொள்ளையடித்த மாபெரும் கொள்ளையன் சிற்றிஹாட் வெயார் முதலாளியின் திருவிளையாடல்!! நடந்தது என்ன? வீடியோ

குறித்த கனியவள கொள்ளையை நாம் ஏற்கனவே கடந்த வாரம் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பு கீழே உள்ளது.அதையும் பார்வையிடவும். தனது பிரதேசத்தில் நடக்கும் சமூகச்சீரழிவுகள் மற்றும் வளக் கொள்ளைகளை தட்டிக் கேட்பதில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையிலேயே இளங்குமரன் நடவடி்ககை எடுத்திருந்தார். கனிய வளக் கொள்ளையன் தொடர்பான பதிவு இந்த இணைப்பின் கீழ் உள்ளது….

தென்மராட்சியில் கொள்ளையடிக்கப்படும் கணிய வளம்!! இளங்குமரனுக்கு தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் உள்ள பல முதலாளிகள் யாழ்ப்பாண மக்களையும் அவர்களின் வளங்களையும் சூட்சுமமாக கொள்ளையடித்தே மிகப் பெரும் கோடீஸ்வரர்களாக மாறினார்கள். குறிப்பாக விண்ணன் என்ற பன்னாடை முதல் சிற்றி ஹாட்வெயார் முதலாளி சோமசுந்தரம் பிரகாதீஸ்வரன் வரை பல முதலாளிகள் மிகப் பெரும் கொள்ளையர்களாகவே யாழ்ப்பாணத்தில் உலாவுகின்றார்கள்.

 சிற்றி ஹாட்வெயார் முதலாளி சோமசுந்தரம் பிரகாதீஸ்வரனின் லொறி யாழ்ப்பாணத்தின் முக்கிய கனிய வளமான சுண்ணக்கற்களை திருகோணமலை டோக்கியோ சீமந்து நிறுவனத்திற்கு எந்தவித அனுமதியுமல்லாது கடத்திச் செல்லும் போது இளங்குமரனால் பிடிக்கப்பட்டது. சாதாரணமாக வீட்டு வளவுகளில் அகழும் குறித்த சுண்ணக்கற்களை சிறிய லான்ஸ்மாஸ்ட்டர்களில் கொண்டு செல்லும் போதே பிடிக்கும் பொலிசார் இந்தப் பாரிய கடத்தலை தொடர்ச்சியாக மேற்கொள்ள அனுமதித்தது எப்படி? தென்மராட்சிப் பிரதேசத்தில் குறித்த கற்களை அகழும் போது அதிகாரிகள் கண் மூடிக் கொண்டிருந்தது எப்படி?

யாழ்ப்பாணச் சுண்ணக்கற்களை எந்தவித அனுமதியும் இல்லாது கொள்ளையடித்து அகழ்ந்து சென்று வெளிநாட்டு சீமெந்து நிறுவனமான டோக்கியோ நிறுவனத்திற்கு அதனை விற்று அந்த நிறுவனத்தால் பாராட்டும் பெற்றுள்ளான் குறித்த சிற்றி ஹாட்வெயார் முதலாளி பிரகாதீஸ்வரன். மூலப்பொருட்களை விற்று அந்த மூலப்பொருட்களால் உருவாகிய முடிவுப் பொருட்களையும் தானே முகவராக இருந்து பெற்று யாழ்ப்பாண மக்களை பேயர் விசரர்களாக நினைத்து கோடிகளில் உழைத்து வந்துள்ளான் குறித்த பிரகாதீஸ்வரன் . தற்போது அவனது லொறி சுண்ணக்கற்களுடன் பிடிபட்டவுடன் தனது மானம் போய் விட்டது என கத்திக் கூப்பாடு போட்டு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளான். லொறி பிடிபட்ட போது சரியான ஆவணங்களை பொலிசாரிடம் காட்டியிருந்தால் பொலிசார் குறித்த லொறியை செல்ல அனுமதித்திருப்பார்கள். ஆனால் ஆவணங்கள் இல்லாது சுண்ணக்கற்களை கடத்திச் சென்று பிடிபட்டு தென்மராட்சி பொலிஸ் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் நடந்த சம்பவத்திற்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் எதற்காக முறையிட்டான் பிரகாதீஸ்வரன் . யாழ் நகரப்பகுதி பொலிசாரின் செல்வாக்கு அவனுக்கு இருக்கின்றது என்பதற்காகவா?

யாழ்ப்பாணக் கொள்ளையனுக்கு வெளிநாட்டு நிறுவனம் கொடுத்த விருது….

May be an image of 9 people and text

May be an image of ticket stub and text
May be an image of ticket stub and textMay be an image of 4 people and text