கொழும்பில் கஞ்சா பாவித்த கிரேன் சாரதி!! ஒருவர் பலி!! 7 பேர் படுகாயம்!! நடந்தது என்ன? வீடியோ
பொரள்ளை, கனத்த சந்தியில் இன்று (28) அதிகாலை பாரிய சாலை விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பாதையில் பயணித்த கிரேன் ஒன்றினது பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பல வாகனங்கள் மீது மோதி, ஏறி மிதித்ததால் இந்த கொடூர விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர், அத்துடன் பல வாகனங்கள் மீதேறி மிரித்துத் துவைத்து நசுக்கிக்கொண்டு சென்ற கிரேன் வாகனத்தினால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்ததுன் பாதையில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அவசர உதவியாளர்கள் விரைந்து வந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் இப்பகுதியில் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கனரக வாகனத்தை செலுத்தி வந்த சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் தொடர்புடைய கிரேன் லாரியின் ஓட்டுநர் சம்பவம் நடந்த நேரத்தில் கஞ்சா உட்கொண்டிருந்தார் என்று மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.










