யாழில் கொடூரம்!! ரயில் மோதிப் பல உயிர்கள் கோரப்பலி!! (Photos)
யாழ்ப்பாணம், தென்மராட்சி, எழுதுமட்டுவாழ், ஆசைப்பிள்ளை ஏற்றத்தில்
தொடருந்துடன் மோதி 5 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடனே
கால்நடைகள் விபத்துக்குள்ளாகின.
தொடருந்தில் கால்நடைகள் மோதி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளைக் கட்டாக்காலிகளாக விடுவதாலேயே
இவ்வாறான விபத்துக்கள் நடக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வாறான அவல உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் தமது கால்நடைகளைக் கட்டி வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடருந்து மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் இறந்துள்துடன் மற்றொரு கன்று காயமடைந்தள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை பயணித்த தொடருந்து தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை மோதியுள்ளது. இதன் காரணமாக இரண்டு கன்றுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.




