புதினங்களின் சங்கமம்

பளை வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(Photos)

நேற்று முன்தினமிரவு கைதாகியுள்ள பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41) இனை விடுதலை செய்ய வலியுறுத்திப ளை பிரதேச மக்கள் மற்றும் நோயாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர்.பளை வைத்தியசாலை முன்பதாக திரண்டு நூறு வரையிலான மக்கள் மற்றும் நோயாளர்கள் வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபனை விடுவிக்க அல்லது உடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கோரியோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே அவர் கொழும்பிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இன்று வைத்தியசாலை பணிகள் தடைப்பட்டு போயிருந்தன.

கடமை நிமித்தம் முல்லைதீவு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் ஆனையிறவில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாத தடுப்புபிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

தெற்கில் முஸ்லீம் வைத்தியர் ஒருவர் மீது ஆயிரக்கணக்கான பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவை ஏதுமே நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.இப்பொழுது அவரை விடுவிக்க அரசு திண்டாடுவதாக தெரிவித்த பளை வைத்தியசாலை அபிவிருத்தி சங்க தலைவர் குழந்தைவேல் சிவரூபனை விரைந்து விடுதலை செய்யவேண்டும் அல்லது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Image may contain: 2 people, people standing, wedding, tree, crowd, sky and outdoor

Image may contain: 4 people, people standing, crowd, wedding, tree and outdoor

Image may contain: 5 people, people standing, crowd and outdoor

Image may contain: 1 person, standing, wedding, crowd and outdoor