கிளிநொச்சிப் பகுதியில் 22 வயதான ராஜ்குமார் அருள்வேந்தன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 5 தற்கொலைப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்களை அறிந்து இளவயதுடையவர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ன.









