யாழில் வைத்தியர்களின் கைத்தொலைபேசிகளைத் திருடிய கள்ளன் இவன்தான்!! பிடிபட்டது எப்படி??
வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஒருவாரத்துக்குள் மருத்துவ சேவையாளர்கள் இருவரின் அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன.
வெளிநோயாளர் பிரிவின் மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளர் ஒருவரின்
அலைபேசி கடந்த வியாழக்கிழமை (15) திருட்டுப்போயிருந்தது. கடந்த சனிக்கிழமை
10ஆவது நோயாளர் விடுதியில் மருத்துவர் ஒருவரின் அலைபேசி இவ்வாறு திருட்டுப்
போயிருந்தது.
இந்தச் சம்பவங்களையடுத்து வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
உஷார் அடைந்தனர். மருத்துவ சேவையாளர்கள் இருவரினது அலைபேசிகளையும் திடிய
அதே இளைஞன் இன்று 27ஆவது விடுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரின்
அலைபேசியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய வேளை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால்
மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பிடிக்கப்பட்டார். அவர் மேலதிக
விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

