புதினங்களின் சங்கமம்

தன்னைக் காதலியுடன் சேர்த்து வைக்க கோரி விஜயரூபன் நடாத்திய விளையாட்டு!!(Photos)

நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை களக்காடு பஜார் முழுவதும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டிய காதலன் .( நாம் தமிழர் வேட்பாளர்)

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன்..
களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். களக்காடு அருகே உள்ள மேலபத்தை பகுதியை சேர்ந்தவர் தானியேல் இவருடைய மகள் கிருபா..

*பல பேருக்கு காதலை சேர்த்து வைக்க லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் மேலபத்தை பகுதியை சேர்ந்த கிருபாவை 4 ஆண்டுகளாக லவ் பண்ணி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கிருபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமானது.இதனை அறிந்த விஜய் கிருபாவுடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டி உள்ளார்.
குறிப்பாக கிருபாவிற்கு நிச்சயம் செய்த மாப்பிளை வீட்டிலும் சுவரொட்டியை ஓட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபாவின் வீட்டார் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை தேடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான விஜய் ரூபன் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார்