நகைச்சுவை நடிகர் விவேக், தோசைக்சட்டியில் உட்கார்ந்து
விட்டு, உட்கார முடியாமல் அவஸ்தைப்படுவதை போன்ற நகைச்சுவை காட்சியொன்று
திரைப்படமொன்றில் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம். தனது பின்னழகை
அழகுபடுத்த செயற்கை முறையை நாடிய இளம்பெண்ணொருவரின் கதியும் இப்பொழுது
அப்படித்தான் ஆகியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த ஏஞ்சலா பெட்ரோசா என்ற 26 வயது பெண், தனது பின்னழகை
எடுப்பாக காண்பிக்க செயற்கை ஒப்பனை சிகிச்சைமுறையை மேற்கொண்டிருந்தார்.
அவரது பின்புறத்தில் 300 மில்லி சிலிக்கன் செலுத்தப்பட்டிருந்தது.
எனினும், சிகிச்சை விபரீதமாகி, அவருக்கு கடும் வலி ஏற்பட்டது. பின்னர் அது பெரிய காயங்களை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மற்றும் அழுகும் திசுக்களை அகற்றி அவரது உயிரைக்
காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. அவர் இரண்டு
மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்தார்.
அவரது உடலின் பிறபகுதிகளிலிருந்து கொழுப்பு எடுக்கப்பட்டு, பள்ளம்
நிரப்பப்பட்டது. எனினும், அது முழுமையான நிரப்பப்படவில்லை. இப்பொழுதும்
அவரது பின்புறத்தில் இரண்டு சிறிய பள்ளங்கள் உள்ளன. அவர் மேலும் அறுவை
சிகிச்சைக்கு உள்ளக்கப்படவுள்ளார்.
உலகம் முழுவதும் இந்த முறையான சிகிச்சையால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய
தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கன் சொசைட்டி
ஒஃப் பிளாஸ்டிக் சேர்ஜன்களின் கூற்றுப்படி, இந்த சிகிச்சைமுறை ஆபத்தான
இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
பிரிட்டனின் முன்னணி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், இந்த வகை
ஒப்பனை அறுவை சிகிச்சையின் பாதுகாப்பு குறித்து முறையான மறுஆய்வைத்
தொடங்கப்போவதாக இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், பெட்ரோசா, இதன் ஆபத்தை தெரிந்து கொள்ளாமல் விபரீத
முயற்சியில் இறங்கி விட்டார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும்,
தொடர்ந்து வலி நீடிப்பதாகவும், தனது சுயமரியாதையை அழித்துவிட்டதாகவும்
தெரிவிக்கிறார்.










