புதினங்களின் சங்கமம்

கோத்தாவின் ஆட்டம் யாழ்ப்பாணத்தில் தொடங்கியது!! மீண்டும் குஞ்சுமணியைத் துாக்கும் ரவுடிகள்குழு!! (Video)

கோத்தாவின் ஆட்டம் யாழ்ப்பாணத்தில் தொடங்கியது!! மீண்டும் குஞ்சாமணியைத் துாக்கும் ரவுடிகள்குழு!!

யாழ் மாவட்ட ராணுவத்தளபதியாக இருந்த ஹத்துருசிங்க என்பவரால் மகிந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட குழுவே ஆவா குழு என்ற பெயரில் இயங்கியது. இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கும் பொலிசாருக்கும் இடையில் யார் பெரியவர் என்று நடந்த போட்டியிலேயே பொலிசாரால் ஆவா குழு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் ரணிலின் காலத்திலேயே இந்த செயற்பாடு ஆரம்பித்தது. தற்போது ஆவா குழு என்ற பெயரில் இராணுவ புலனாய்வுப்பிரிவால் வழிநடாத்தப்படும் குறித்த குழுவுக்கு இடையில் விரிசல் ஆரம்பித்து டில்லு குழு என்றும் ஆவா குழு என்றும் இரு குழுக்களுக்கிடையிலும் சண்டைகள் பல நடந்து வருகின்றன. இவற்றை இராணுவம் வேடிக்கை பார்த்து வருகின்றது. இந் நிலையில் கொக்குவிலில் கலாச்சார கேடு நடக்கின்றது என கூறி ஆவா குழுவால் விடுதி ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் விடுதி உரிமையாளர் கடுமையான வாள்வெட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. இவற்றின் பின்னணியில் யாழில் மீண்டும் கோத்தாவின் குழு இயங்கத் தொடங்கியுள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது.