துர்நடத்தையால் ஒதுக்கப்பட்ட வடக்கு கல்வி அதிகாரிகள்! வடக்கு கல்விப் பணிப்பாளராக கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமனம்!
அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் கொண்டவர். 1975.10.09 ஆம் திகதி பிறந்தவர் என்பதால் 2035.10.08 ஆம் திகதி வரை சேவையில் இருப்பார். எதிர்வரும் 21.08.2025 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண கல்விப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் இருந்து துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் , தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன் ஆகியோர் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போதிலும் சிரேஷ்ட நிலையில் இருந்ததால் ஜெயச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் வவுனியா வடக்கு நிதி மோசடி அன்னமலர் பணிப்பாளராக இருந்த போதே நடந்துள்ளது. அத்துடன் இரத்மலான விடுதியில் மதுபோதையில் குழப்பம் விளைவித்தமை முதலான குற்றச்சாட்டுகள் கமலராஜன் தொடர்பில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

