யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் இரவு 10:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று செம்பியன் பற்று தெற்கு பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது. இச் சுற்றி வளைப்பில் 8பொதிகள் அடங்கிய 15.795kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

