புதினங்களின் சங்கமம்

ஶ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை விஷேட வைத்தியர் மகேஷி விஜேரத்ன விளக்கமறியல் நீடிப்பு!!

ஶ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை விஷேட வைத்தியர் மகேஷி விஜேரத்ன விளக்கமறியல் நீடிக்கப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்படும் இன்றைய காட்சி!
இவர் தன்னை சார்ந்த தனியார் நிறுவனம் மூலம் ரூ. 50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு ரூ. 175,000 இற்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார். நோயாளிகளுக்கு இதனால் ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இவர், பல நாட்களாக மூளைச் செயலிழப்பு என அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு மோசடி செய்தமையும் அண்மையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இவரது 21 வயது மகளும் கைது செய்யப்பட்டுள்ளமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.
May be an image of 1 person and textMay be an image of 4 peopleMay be an image of 4 people