புதினங்களின் சங்கமம்

யாழில் பரபரப்பு!! பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் கைது!!

பளை பிரதேசவைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி நேற்றிரவு கைது
செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர்
கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியான சி.சிவரூபன் என்பவரே
கைதாகியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியாகவும் இவர்
கடமையாற்றியிருந்தார்.

நேற்றிரவு 10 மணியளவில், பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதிக்கு
சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள
போதும், சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினராலேயே ‘அழைத்து’ செல்லப்பட்டதாக
வைத்தியசாலை தரப்புக்கள்  தெரிவித்தனர்.

சில மாதங்களின் முன்னர் பளையில் முன்னாள் போராளியொருவர் ஆயுதங்களுடன் கைதாகிய
விவகாரத்தில், ஏற்கனவே அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு
செய்திருந்ததாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.