யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் 17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாணப் புகைப்படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இரண்டு மன்மதராசாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு 4,6ஆம் வட்டாரங்களை சேர்ந்தவர்களே கை செய்யப்பட்டனர்.
<
மேற்படி மாணவி இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார். இதன்போது, இருவரும் நிர்வாணப் புகைப்படங்களை தொலைபேசியில் பரிமாறியுள்ளனர்.
இந்த காதல் முறிவடைந்ததால், மாணவியின் ஒளிப்படங்களை தனது நண்பர்களிற்கு அந்த இளைஞன் பரிமாறினார்.
இந்த புகைப்படங்களை வைத்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்க 4 மன்மதராசாக்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் அந்த புகைப்படங்களை காண்பித்து, தமது ஆசைக்கு இணங்காவிட்டால் அவற்றை பகிரங்கப்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளனர்.
மாணவி இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறையிட்டார்.
துரிதமாக செயற்பட்ட பொலிசார் இரண்டு மன்மதராசாக்களை கைது செய்தனர். மேலும் 2 மன்மதராசாக்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.





