அமைதியான நடந்த செம்மணிப் போராட்டம் குழம்பியது யாரால்? சி.வி.கே சிவஞானம் உட்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்……
அமைதியான வழியில், செம்மணி புதைகுழிக்குள் கொன்று புதைக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரி, அணையாதீபம் என்ற இந்த போராட்டத்தை நடத்தி, பதாதைகளை எழுத்துதல் முதல் கொண்டு, பேனர்கள் தயாரித்தல், இறந்தவர்களின் விபரங்கள் தாங்கிய பதாகைகள் என இதெல்லாம் ஒழுங்குபடுத்தி, எந்த கலவரமும் இன்றி ஒப்பேற்றுவது என்பது இலகுவான காரியமல்ல.
இத்தோடு நில்லாது அங்கு ஐ நா வின் பிரதிநிதியை வரவைத்தது மட்டுமல்லாமல், வந்தவர் ஏனோ தானோ என ஓடிவிடாமல் இருக்க அவருக்கு ஒருவாறு போராட்டத்தின் நோக்கத்தை மிகுதியான சத்ததிற்குள்ளும் விளங்கப்படுத்தி, இதை தத்தமது லாபங்களுக்காக உபயோகித்த பெரிய அரசியவாதிகள், சின்ன அரசியவாதிகள், தம்மை அரசியல் செய்பவர்கள் என கட்டிகொள்வோர், நாளை youtube முழுக்க தனது படம் தான் வரவேண்டும் எண்டு தொண்டை கிழிய துரோகி என கத்தி, அந்த அமைதி போராட்டத்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவர்கள் என, இவர்கள் எல்லாம் அமைதியான அந்த போராட்டத்தை அலங்கோலப்படுத்த முனையும் போது, என்னதான் கத்துபவர்களுக்கு அரசியல் மாற்றுக்கருத்து இருந்தாலும், திரு சி வி கே சிவஞானம் அவர்களுக்கான மரியாதையை கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக, அந்த இடத்தில் கொஞ்சம் கூட பயமின்றி, துணிந்து அவர்களை நிறுத்திய இந்த புயலை இவ்வளவு காலமும் நான் தென்றல் என்றல்லோ நினைத்திருந்தேன்.
சரியான நேரத்தில், சரியானதை காரியத்தை, மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என கணப்பொழுதில் அதை செய்ய துணிவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அவள் போராடிய அந்த நிமிடங்கள் 
எனக்கு அவர்மீதான மதிப்பை கூட்டியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்
.
சட்டத்தரணியாக கறுப்பும் வெள்ளையும் சேலைக்கட்டி காரில் போய் கோட்டில் காணிவழக்கு பேசிவிட்டோ, வங்கியின் சட்ட ஆலோசகராக இருந்துவிட்டோ, நாலு உறுதியை எழுதினமா நாலு டிவோர்ஸ் வாங்கி கொடுத்தமா என்றுமட்டும் வாழ்ந்து கொண்டோ, இப்படியெல்லாம் போராட்டத்துக்கு போனால் காவலிப்பயலுகளால் நமது மானம் போய்டும் என ஒதுங்கி இராமல் மக்களுக்காக போராடிய Athreya Vaishu Athreya க்கும் அவரோடு இதை ஒழுங்குபடுத்திய மற்றயவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இவரோடு இன்னும் சில பெண் சட்டத்தரணிகள் இணைந்திருக்கலாம் என்ற ஆதங்கம் வீடியோக்களை பார்க்கும்போது இருக்கிறது .
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத் தஞ்சு மவன்கற்ற நூல்
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்

