கொழும்பில் சம்பவம்!! தாயாரின் கண் முன்னே பொலிசால் 26 வயது யுவதி வல்லுறவு!!
26 வயதுடைய விசேட தேவையுடைய யுவதி ஒருவரை அவரது தாயார் முன்னிலையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்ய தேடப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணிபுவதாக தெரிய வருகிறது.
கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயாரை கவனிப்பதற்காக குறித்த யுவதியும் அவரது தாயும் இரண்டு வருடங்களாக கான்ஸ்டபிளின் வீட்டில் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள், தனது பணப்பையிலிருந்த 10,000 ரூபா பணத்தைக் காணவில்லை எனக் கூறி தாய் மற்றும் மகளை அறைக்கு அழைத்துச் சென்றே இவ்வாறு நடந்து கொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
