புதினங்களின் சங்கமம்

துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள்!

மித்தெனிய – தொரகொலய – தேக்கவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு இளைஞர்களின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று இரவு (24) இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தச் சடலங்களுக்கு அருகில் பல துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் அருகிலேயே ஒரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.