திரைப்பட ஊழல் காட்சியை விட மிக மோசமான உண்மைச் சம்பவம்!! இறந்த சடலங்களுக்கு வைத்தியம் பார்த்த இலஙகை பெண் வைத்திய நிபுணர் மகேஷி! வீடியோ
நரம்பியல் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வருடாந்திர அறிக்கையில் சேர்க்காமல் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, மூளைச்சாவடைந்த ஒரு நோயாளியை ஐந்து நாட்கள் வைத்திருந்ததாகவும் வெளி நிறுவனத்திலிருந்து அறுவைச் சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்து அந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணையத்தின் (BIC) உதவி பணிப பாளர் (சட்ட) சுலோச்சனா ஹெட்டியாராச்சி நேற்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவிடம் தெரிவித்தார்.
கேள்விக்குரிய அறுவைச் சிகிச்சை உபகரணங்களை கொள்வனவு செய்தமக தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உதவிப் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், மேலும் அவர்களை ஜூலை 8 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, மருத்துவமனையின் தலைமை இலிகிதர் கெகுலந்த லியனகே இந்திகா மற்றும் நிமல் ரஞ்சித் முத்துக்குடா ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

