புதினங்களின் சங்கமம்

யாழ் புங்குடுதீவு ஐயர் கொலையில் சில புலம்பெயர் கிழட்டுக் காமுகர்கள்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

யாழ் புங்குடுதீவு ஐயர் கொலையில் சில புலம்பெயர் கிழட்டுக் காமுகர்கள்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

 

விதையொன்று விருட்சமாகி வேரோடு வீழ்த்தப்பட்டது.

புங்குடுதீவு மண்ணில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவரும், ஊரைதீவு மண்ணின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றியவரும், புங்குடுதீவு பாணாவிடைச்சிவன் அர்ச்சகருமாகிய‌ ரூபன் சர்மா படுபாதகமாக படுகொலைசெய்யப்பட்டிருக்கின்றார். “சின்ன அய்யா” என்றும் “தம்பி” என்றும் ரூபன்சர்மா அவர்களால் அழைக்கப்பட்ட அவரது உதவி அட்சகரால் நயவஞ்சமாக நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரூபன்சர்மா அவர்களுடைய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் சக ஆலயங்களின் இரு பூசாரிகள் தீட்டிய சதிவலையில் உதவி அட்சகர் வீழ்த்தப்பட்டிருக்கின்றார். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மது அருந்திவிட்டு ரூபன் சர்மா வசித்து வந்த கிராமத்து வீட்டிற்குள்(ஊரைதீவு மத்தி) கபடத்தனமாக நுழைந்த நன்நடத்தையற்ற இருபூசாரிகளும் உதவி அட்சகரின் உதவியுடன் தாக்கி இருக்கின்றார்கள். வீரமும் உடல் திடகாத்திரமும் மிகுந்த ரூபன் சர்மா எதிர்பாராத‌ தருணத்தில் தாக்கப்படுள்ளார். திருப்பித் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்த வேளையில் தடுக்கப்பட்டு படுமோசமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக அவசர மருத்துவப்பிரிவினரின் அம்புலன்ஸ் வண்டி விரைந்து வந்த‌போதும் ரூபன்சர்மா அவர்களை காப்பாற்ற முடியவில்லை. ஊர்காவற்துறை பொலிசார் மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையின் துப்பறியும் பிரிவினர் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் மோப்பம் பிடிக்கும் நாய் சகிதம் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாலைவரை விசாரணை நடத்தியிருக்கின்றார்கள். இறுதியில் மோப்பம் பிடிக்கும் நாய்(Police Dog) உதவி அட்சகரை இனம் காட்டியுள்ளது. தொடர் விசாரணையில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு, ரூபன் சர்மா அவர்களின் தொலைபேசி மற்றும் அவரது வீட்டில் பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன‌. நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை வாசலில் ஊரைதீவு மக்கள் கதறி அழுதபடி காத்திருக்கின்றார்கள். ஊரைதீவு சனசமூக நிலையத்தினர், ஆலய நிர்வாகத்தினர், கிளிநொச்சியில் வசிக்கும் அன்னாரின் தாய் மற்றும் சகோதரர் சம்பவ இடத்திற்கு சென்று துக்கத்தை பகிர்ந்து இருக்கின்றார்கள். அதிகாலை வந்த நீதவானின் அனுமதியின் பின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. தன் மகனை இழந்து கதறி அழுத தாய் மற்றும் ஊர்த்தாய்மார்களின் கண்ணீரால் ஊரைதீவு கிராமமே கண்கலங்கி தவிக்கின்றது.

Image may contain: 3 people, people standing and beard

எல்லோரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டு மங்காப்புகழுடனும், நற்பெயருடனும் ரூபன் சர்மா எனும் எங்கள் கதாநாயகன் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

(வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட ரூபன் சர்மா 2009 ஆண்டில் எங்கள் ஆலயத்தின் பூசகராக‌‌ இணைந்தார். அயலில் இருக்கும் பிற கோவில்களிற்கும் அவரே நித்திய பூசைகளை செய்து வந்தவர். கடந்த 11 ஆண்டுகளாக, பூசாரியாக மட்டுமல்லாது எங்கள் ஆலயத்தின் வளர்ச்சியில் தன்னை முற்றுமுழுத்தாக இணைத்துக்கொண்டவர். அவருக்கு வயது 33. திருமணமாகவில்லை. தந்தையை சிறுவயதில் இழந்தும் தனது முயற்சியால் அந்தக் குடும்பத்தை தாங்கிப்பிடித்தவர். ஒருவகையில் நிர்க்கதியாக நிற்கும் எங்கள் கிராமத்து வயோதிபர்களிற்கு அவரே தலைமகன்)

Image may contain: 3 people, people standing

தகவல்: ஊரைதீவு மக்கள்

நீதி கிடைக்குமா ரூபன் ஐயாவிற்கு…………………………..
வயலூர் முருகன் ஆலய நிர்வாகம் செய்த தவறுகள்
மற்றும் பிரதேச வேறுபாடுகளால் இன்று ஓர்
உன்னதமான உயிர் காவுவாங்கப்பட்டுள்ளது
வயலூர் முருகன் ஆலய பூசாரி மது மாது பித்தர்
என்று தெரிந்தும் ஆலய நிர்வாகம் நடவடிக்கை
எடுக்காமல் இருந்ததின் விளைவு
இன்று புங்குடுதீவில்
பத்திற்கு மேற்பட்ட ஆலயங்கள்
நித்திய பூசைகள் இல்லாத அவலம்
வயலூர் முருகன் ஆலயம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள
வேதனையான நிகழ்வு
இத்தனைக்கும் ஆலயநிர்வாகம்
பொறுப்பு கூற வேண்டும்
பூசாரி மதுவிற்கு அடிமை என்று தெரிந்த போது
ஊரவர்கள் நிர்வாகத்திடம் முறைநிட்டபோது
நிர்வாகம் அலட்சியப்போக்கான பதிலை
தான் பொதுமக்களிடம் கூறியுள்ளது
வேதனை அளிக்கின்றது
(பூசாரி மணிஅடிப்பதை பார்ப்பது தான் எனது வேலை
தண்ணியடிப்பதை பார்ப்பது எனது வேலையில்லை)
( பூசை நடப்பதை மட்டும் பாருங்கள் வேறு எதையும்
பார்க்க வேண்டாம் )
என்ற அசமந்த போக்கான பதிலை கூறியதாக
ஊரவர்கள் ஆதங்கப்படுகின்றனர்
இவரை கொலை செய்தவர்கள் அவரது வீட்டிலுள்ள cctv camera, decoder என்பவற்றை கழற்றி சென்று வயலூர் முருகன் ஆலய மூலஸ்தானத்திற்குள் ஒழித்து வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான் வயலூர் முருகன் ஆலயத்திற்கு பூசராக புதிதாக ஒருவர் வந்ததாகவும், அவருக்கும் ஊரதீவு ரூபன் சர்மாவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
அதுமட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலிருந்து உதவி எனும் பெயரில் சில வயதான வாலிபர்கள் ஊரிலுள்ள குடும்பத்தலைவனற்ற பெண்களுக்கு உதவி செய்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி தமது காம இச்சைகளை தீர்த்துள்ளதாகவும், அதற்கான ஆதரங்களை ஊரதீவு ரூபன் சர்மா வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
காவல்துறை ஒரு கோணத்தில் மட்டும் இந்த கொலையை விசாரிக்காமல் இந்த கொலையின் பின்னனியில் அந்த வயதான வாலிபர்களுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். தமது பிழைகளை மறைக்க ஊரதீவு ரூபன் சர்மா கொலை செய்யப்பட்டாரா?
எம்மண்ணை நம்பி வந்த ஊரதீவு ரூபன் சர்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்….?
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

நன்றி…

Thamilarasan Kathirgam

Image may contain: 2 people, people standingImage may contain: 4 people, people standing