புதினங்களின் சங்கமம்

வீட்டு மின்சாரத்தை துண்டித்த மின்சாரசபை ஊழியர் நையப்புடைப்பு!! (Photo)

மின் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின்சார இணைப்பை
துண்டித்த காரணத்திற்காக மின்சாரசபை உத்தியோகத்தர் ஒருவர், கடுமையாக
தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (15) களுத்துறை, அகலவத்த பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மின் கட்டணம் செலுத்தாத வீட்டிற்கு சென்ற உத்தியோகத்தர், வீட்டு
உரிமையாளர் ஏற்கனவே அச்சுறுத்தப்பட்டுள்ளார். பின்னர் உயரதிகாரிகளிற்கு
தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் வேறு சில அதிகாரிகளுடன் மீண்டும்
சென்றபோது, வீட்டு உரிமையாளரும், மகனும் மின்சாரத்தை துண்டிக்க
அனுமதிக்கவில்லை. இதையடுத்து மேலதிக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு
மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர் மின்சாரசபை அலுவலரை இரும்பு கம்பியால் நையப்புடைத்துள்ளார்.

அகலவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.