யாழில் கை,கால், வாய் கட்டப்பட்டு கட்டடத்துக்குள் நிர்வாணமாக கிடந்த யுவதிகள்!! பத்தினியம்மா பதுங்கியது ஏன்? வம்பனின் புலனாய்வுத் தொடர் 2
1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 2 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.
முதலாம் பகுதி கீழே
1995ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆரம்பிக்கப்பட்ட சூரியக்கதிர் படை நடவடிக்கையால் பொதுமக்கள் இடம்பெயர்ந்து வடமராடசி, வன்னி, தென்மராட்சிப் பகுதிகளுக்கு சென்றார்கள். 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 திகதி தென்மராட்சி படையினர் வசம் வந்தபின் அப் பிரதேசத்திலிருந்து 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதிக்குப் பின்னர் யாழ், வலிகாமம் மற்றும் நகரப்பகுதிகளு்ககு மக்கள் மீள வரத் தொடங்கினார்கள்.
1996ம் ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் யாழ் குடாநாடு முழுவதும் படையினர் கைப்பற்றி விட்டார்கள் என்றும் முழுமையான சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சந்திரிக்கா அரசாங்கம் அறிவித்தது.
குடாநாட்டின் சிவில் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியான யாழ் அரச அதிபராக அந் நேரம் செயற்பட்டவர் செ.பத்மநாதன். அரியாலையைச் சொந்த இடமாகக் கொண்டவர். பல சம்பவங்களுக்கு மிக முக்கிய சாட்சியாக உள்ளவர். (இவர் தொடர்பாக ஏராளமான சம்பவங்களுடன் கூடிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. )
1996ம் ஆண்டு அரியாலை ஏ.9 வீதியில் காணப்பட்ட படை முகாமின் தற்போதைய தோற்றம்

மேலதிக அரச அதிபராக இருந்தவர்கள் க.சண்முகநாதன் மற்றும் பத்தினியம்மா திலகநாயகம் போல்
யாழ்ப்பாண பிரதேசசெயலாளராக இருந்தவர் க.குணராசா. ( இவர் தொடர்பாகவும் ஏராளமான சம்பவங்களுடன் கூடிய தகவல்கள் எம்மிடம் உள்ளன)
கிருசாந்தி கொல்லப்பட்ட பிரதேசத்தின் கிராமசேவகராக இருந்தவர் இராமலிங்கம் சந்திரகுமார். தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். (இவரது மனைவி கயல்விழி அண்மையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.)
குடாநாட்டுக்கு மக்கள் வந்து குடியமர்ந்த பின் பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது. குறிப்பாக இறைச்சிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை உட்பட்ட பொருட்கள் பலமடங்கு கூடிய விலையில் விற்கப்பட்டன. வெற்றிலை ஒன்று அந்த நேரமே 15 ரூபாவுக்கு விற்கப்பட்டது. (தற்போது அந்த விலை கணக்கில் 300 ரூபா பெறுமதியானது).
இந்தப் பொருட்கள் தட்டுப்பாட்டையடுத்து குடாநாட்டுக்கு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பூநகரியிலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியான தனங்களப்பு, அரியாலை போன்ற இடங்களுக்கு வியாபாரிகள் உயிராபத்தையும் பொருட்படுத்தாது வெற்றிலை கடத்தி குடாநாட்டு வியாபாரிகளுக்கு கடற்கரை ஓரத்தில் கொடுத்துவிட்டு குடாநாட்டு வியாபாரிகளிடமிருந்து பற்றரி மற்றும் பெற்றோல் போன்றவற்றை கொண்டு செல்வதை வழமையாக கொண்டிருந்தார்கள்.
அதே நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து புலிகளுக்குத் தெரியாமல் பொதுமக்களும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேமான அரியாலைக்கு படகுகுள் மூலம் வந்து கொண்டிருந்தார்கள். பெருமளவான மக்கள் குருநகர் பகுதிக்கு சென்று கரையிறங்கியிருந்தாலும் குறிப்பிட்ட சிலர் அரியாலைப் பகுதியை வந்தடைந்து கொண்டிருந்தனர்.
1999ம் ஆண்டு செம்மணிப் புதைகுழி தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது

அருளையா நவநேசனுக்கு என்ன நடந்தது?
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் வசித்து வந்த பெரும் செல்வந்தரான இரு பெண் பிள்ளைகளின் தந்தையான அருளையா நவநேசன். வயது 41. ( இவருக்கு ஒரு பட்டப் பெயர் உள்ளது. அப்பெயரே பலருக்குத் தெரியும். ஆனால் அப் பட்டப்பெயர் எம்மால் அறிய முடியவில்லை) அவரது மனைவி நவநேசன் சத்தியகலா – வயது 37 ஆகியோர் தமது 14, 11 வயதான பெண் பிள்ளைகளுடன் வன்னி பூநகரியிலிருந்து பெருமளவு நகைகள் மற்றும் பணத்துடன் விடுதலைப்புலிகளுக்கு தெரிவிக்காது படகு மூலம் 1996ம் ஆண்டு 5ம் மாதம் நடுப்பகுதியில் அரியாலை கிழக்கில் வந்து படகில் இறங்கியுள்ளார்கள்.
இவர்கள் ஏற்கனவே தாங்கள் குறித்த பகுதிக்கு வரப்போகும் செய்தியை வெற்றிலை வியாபாரிகள் ஊடாக யாழ் நல்லுார் மூத்தவிநாயகர் வீதியைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை சீலன் ( பெயரில் சிறு மாற்றம் இருக்கலாம்) என்பவருக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். (சீலனின் அண்ணா ஜெயந்தா என்பவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததுடன் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்நேரம் யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கவில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. )
சீலன் அரியாலை தபால்பெட்டி சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்த பாரிய இராணுவ முகாம் புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சீலன் மற்றும் குணரத்தினம் வசந்தன், மணியப்பிள்ளை தேவநேசன் ( பெயர்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்) போன்றவர்களும் அப்பகுதி இராணுவ முகாம் புலனாய்வாளர்களுடன் தொடர்பில் இருந்து வன்னியிலிருந்து வரும் பொருட்களை யாழ்ப்பாணத்திற் கொண்டு வரும் முகவர்களாக இருந்துள்ளார்கள்.
நவநேசன் தனது குடும்பத்துடன் வந்து அரியாலை கிழக்கில் தரையிறங்கிய பின்னர் அவருக்கும் அவரது குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் போனது. நவநேசன் வந்து இறங்கும் தகவல் நவநேசனின் தமையனுக்கு ( தற்போது புலம்பெயர் நாட்டில் உள்ளார்) சீலன் தெரிவித்திருதான். நவநேசன் யாழ்பாணத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது தனது வீட்டில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்பதற்காகவே என அவரது தமையன் 2004ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை கணக்கெடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த புலிகளின் தகவல் மையத்திற்கு தெரிவித்திருந்தார்.
சீலன் தனது தம்பி மற்றும் குடும்பத்தை மீட்டுக் கொண்டு வருவான் என எதிர்பார்த்துக் காத்திருந்த தமையனுக்கு அதிர்ச்சியே மிச்சமாகியது. நவநேசன் குடும்பம் மட்டுமல்ல… சீலனும் அதன் பின்னர் காணாமல் போனான். அவனது குடும்பமும் கடும் முயற்சி செய்தும் அவனைக் கண்டு பிடிக்க முடியாது போய்விட்டது. இன்றுவரை சீலன் காணாமல் போனவனாகவே உள்ளான்.
நவநேசன் தொடர்பாக அவரது தமையன் பல்வேறு தரப்புடன் தொடர்பு கொண்டும் எந்தத் தகவலும் கி்டைக்கவில்லை.
சின்னப்பொடி கொண்டு வந்த காற்சங்கிலிகள் யாருடையவை?
சின்னப்பொடி எனஅழைக்கப்பட்ட ஒருவர் ( முழுப் பெயர் தெரியவில்லை) யாழ் நாயன்மார்கட்டுச் சந்திக்கு சற்றுத் தொலைவில் வசித்தார். அந் நேரம் செம்மணிச் சுடலை மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்படவில்லை. சின்னப்பொடி இராணுவத்துடன் நெருங்கிப் பழகி இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலும் சூனியப்பிரதேச்ங்களிலும் கட்டாக்காலியாக திரிந்த மாடுகளை பிடித்து தனது வீட்டிலேயே இறைச்சியாக்கி விற்று வரும் தொழில் செய்து வந்தவன். அப்பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்று வந்த ஒருவனிடம் கசிப்பு வாங்கி செம்மணிப்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முன்னரங் காவலரண்களில் காணப்பட்ட படையினருக்கு இலவசமாக வழங்கியே தனது மாடு பிடி தொழிலை செய்து வந்தவன்.
1996ம் ஆண்டு யூன் மாத தொடக்கப்பகுதியில் சின்னப்பொடி பல சோடி காற்சங்கிலிகள் மற்றும் ஆண்கள் அணியும் பெறுமதி வா்ய்ந்த வெள்ளியிலான கைக்கடிகாரம் என்பவற்றை கொண்டு வந்து நாயன்மார் வீதியில் உள்ள நகைவேலை செய்யும் ஒருவரிடம் விற்க முற்பட்டுள்ளான். அவன் அப் பொருட்களை கொண்டு வந்த போது நிறை வெறியில் இருந்துள்ளான். அவனிடம் இவை எப்படி உனக்கு கிடைத்தது என குறித்த நகைவேலை செய்பவர் கேட்ட போது “ஆமிக்காரன் தந்தவன்.. விற்றுத்தரச் சொல்லி” என கூறியுள்ளான். அதே நேரம் ”ஆமிக்காரர்கள் இயக்கப் பெட்டைகளை பிடித்து அரியாலை கொட்டுக்கிணற்றடிப் பிள்ளையார் கோவிலுக்கு கிழக்குப் பக்கமாகவுள்ள வீடு ஒன்றில் கை, கால்களைக் கட்டி நிர்வாணமாக்கி படுக்க வைத்திருக்கி்ன்றார்கள்” என்ற தகவலையும் நிறை போதையில் கூறியுள்ளான். இந்த தகவல் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மளமளவென பரவியது.
சின்னப்பொடி கூறிய தகவல்கள் பல நாட்களாக அப்பகுதியில் பலரின் வாயில் உலாவித்திரிந்தன. புலிகளின் தரப்புக்களுக்கு இந்தத் தகவல்கள் போய் இதன் உண்மைத் தன்மை தொடர்பாக ஆரயத் தொடங்கினர். அதே நேரம் புலிகளின் வானொலியில் உருவக தகவலாக குறித்த சின்னப்பொடியின் தகவலும் ஒலிபரப்பாகியது.
அந்த நேரம் அரச அதிபர் பத்மநாதன் சுழியனாக வலம்வந்தார். தனக்கு பொறுப்பான ஆபத்தான பொறுப்புக்கள் பலவற்றை தனக்கு கீழ் செயற்பட்ட மேலதிக அரச அதிபர் சண்முகநாதன் மற்றும் பத்தினியம்மாவிடம் கையளிதிருந்தார். அரசாங்க அதிபரின் ஒரு பிரிவு காணாமல் போனோரை கண்டு பிடித்து குடும்பங்களுடன் இணைக்கும் பிரிவாக அந்த நேரத்தில் செயற்பட்டது. அத்துடன் இராணுவத்தின் விசேட அடையாள அட்டை தொடர்பான பிரிவு பத்தினியம்மாவுக்கு கீழ் செயற்பட்டது.
சின்னப்பொடியின் காற்சங்கிலி விடயம் பத்தினியம்மாவிடம் குறிப்பிட்ட சிலரால் தெரிவிக்கப்பட்ட போது பத்தினியம்மா இது தொடர்பாக இராணுவ உயரதிகாரியிடம் கேட்பதாக கூறியுள்ளார். இத் தகவல் பத்தினியம்மாவிடம் தெரிவித்து ஒரு வாரங்களுக்கிடையில் பத்தினியம்மா உடனடியாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடமாற்றப்பட்டார். அத்துடன் அவருடன் சேர்ந்து மேலதிக அரச அதிபர் சண்முகநாதனுக்கும் கொழும்பு்க்கு இடமாற்றம் பெற்ற கடிதமும் யாழ் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடித்துவிட்டு உளறிய சின்னப்பொடிக்கு நடந்தது என்ன?
சித்துப்பாத்தி மயானம் எப்போது மக்கள் பாவனைக்குவிடப்பட்டது?
ஞானந்தியின் சடலம் எங்கு எரிக்கப்பட்டது? கிருசாந்தி புதைத்த அன்று நடந்தது என்ன?
தொடரும்…..

