புதினங்களின் சங்கமம்

துன்னாலையில் கசிப்பை வீதியில் வீசி சென்ற நபர்!!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் 15 லீட்டர் கசிப்பினை வீதியில் வீசி விட்டு சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை , துன்னாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை , மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், பொலிசாரை கண்டதும்,  மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த பொதி ஒன்றினை வீதியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளார்

குறித்த பொதியை பொலிஸார் மீட்டு சோதனை செய்த போது, அதனுள் போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் 15 லீட்டர் கசிப்பு காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அவற்றை வீசி சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.