புதினங்களின் சங்கமம்

வவுனியா கனகராயன்குளத்தில் முதியவரைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை கனகராயன்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம் ஒன்று கடந்த 22 ஆம் திகதி பொலிசாரால் மீட்கப்பட்டது.

குறித்த முதியவரின் முகம் மற்றும் உடல்பகுதிகளில் காயங்கள் காணப்பட்ட நிலையில் கொலை என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சடலத்தை பார்வையிட்ட வவுனியா நீதவான் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

சடலம் மீட்க்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த முதியவரின் களுத்து நெரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருந்ததுடன்,அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16,19,18 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றயதினம் இரவு கைதுசெய்திருந்தனர்.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.