சென்ரி
சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
இப்ப சென்ரி பார்க்கிறது ஒரு நல்ல தொழில். என நான் சொன்ன போது ஓம் மச்சான் நானும் கேள்விப்பட்டனான். என்று கூறிய நண்பன் சோதி மண்ணுக்காக சென்ரி பார்கிறாங்களாம். என்று நக்கலாக சொன்னான்.
2009 இற்கு முன் இந்த மண்ணில் நடந்த உரிமைக்கான போராட்டத்திற்காக சுழியன் தனியே பேனை மட்டும் பிடிக்கவில்லை ரைபிலும் பிடித்தவன் உள்ளக பாதுகாப்பு படையில் மாங்குளம், மல்லாவி, ஒட்டுச்சுட்டான் காடுகளில் LRRP காரர் இந்த மண்ணுக்குள் வாராமல் இருக்க சென்ரி பார்த்த காலம் அது. அப்ப சிங்கள் தரப்பினரிடமிருந்து மண்ணை பாதுகாக்க சென்ரி இருந்தனாங்கள்.
ஆனால் இப்பவும் எங்கட பொடியல் சிலதுகள் மண்ணுக்காகதான் சென்ரி இருக்கிறாங்கள்
அதுதான் எங்கட பிரதேசங்களின் மண்ணை பாதுகாக்க திடீர் திடீரென வார சிங்கள் பொலீஸ், எஸ்டிஎப் ஆமிக்காரரை காட்டிக்கொடுக்க எங்கட பொடியல் சென்ரி இருக்கிறாங்கள்.
முந்தி நாங்க்ள மண்ணை பாதுகாக்க சென்ரி இருந்த போது எங்கட கையில ஒரு ஏகே 47, நெஞ்சில கோல்சர் ரீம் லீடரிடம் ஒரு வோக்கி. சொப்பினில தனித்தனியாக சோறும் ஒன்று அல்லது இரண்டு கறிகள் வரும் எல்லாத்தையும் ஒரு சொப்பினுக்குள் கொட்டி குலைச்சி சாப்பிடுவம் அதுவொரு டேஸ்ட். நாங்கள் சாப்பிடும் போது இரண்டு பேர் சென்ரி இருப்பாங்கள். தண்ணீர் கிணறு அல்லது குளத்து நீர். கான் ஒன்றில் எடுத்த வைச்சிருப்பம். ஏதேனும் ஆசுமாத்தங்கள் சத்தம் கேட்டால் உசாரிகிவிடுவம். சுடச்சொல்லி ஓடரும்வரும். மண்ணை பிடிக்க வார எதிரிகளை வரவிடமல் தடுப்பதுதான் கடமை. எங்களுக்கு அப்ப சம்பளம் எதுவுமில்லை. அது தேசத்திற்கான கடமை.
ஆனால் இப்ப சந்திகளில் மண்ணுக்காக சென்ரி இருக்கும் பொடியளிடம் கையில் ஒரு போன் அன்லிமிடெட் ரீலோட் போடப்பட்டிருக்கும் அதுக்கொரு பவர்பாங் எப்பவும் இயங்கு நிலையில் இருப்பதற்கு. சாப்பாடு பிறைட் ரைஸ் சிக்கன் ரைஸ், என்று நல்ல சாப்பாடு இருக்கிற இடத்திற்கே வரும், குடிப்பதற்கு போத்தல் தண்ணி, சில நேரம் ரின்களில் உள்ள தண்ணி அல்லது சொப்பின் தண்ணியும் கிடைக்கும். முக்கிய சந்திகளில் நிற்பாங்கள் அல்லது பஸ் கோல்ட்களில் சென்ரி நிற்பாங்கள். வீதியால் தங்கட ஏரியாவுக்குள் உள் நுழைக்கின்றவர்களை அவதானித்து அவர்கள் யார் என்பதனை மண் அகழ்கின்ற ஆட்களுக்கு சொல்ல வேண்டும். சிவில வாரது பொலீஸா அல்லது எஸ்டிஎப்பா என்பதுதான் அந்த தகவல். தகவல் பறந்தவுடன் காட்டுக்குள் உள்ள ரிப்பர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் என பறந்துவிடும். மண்ணை பாதுகாக்க வார ஆட்களை காட்டிக்கொடுப்பதான் இப்பவுள்ள கடமை. சம்பளம் 1500 தொட்டகம் 2500 வரை. அத்தோடு மேற்படி இதர வசதிகள்.
காலம் எவ்வளவு வேகமாக மாறியிருக்கிறது. எதிரிகளிடமிருந்து மண்ணை பாதுகாக்க போராடிய இனம் ஒன்று தன்ர இனத்திற்குள் உள்ள சிலதுகளிடமிருந்து மண்ணை பாதுகாக்க முடியாது திணறுகிறது.
என்ன செய்ய?

