புதினங்களின் சங்கமம்

ஆடு அறுக்க முன் புடு…கு அறுக்க முற்பட்ட சுன்னாகம் பிரதேசசபையின் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுரேஸ்குமார்!!

முன்னைய ரணிலின் ஆட்சிக் காலத்தில் விஜயகலாவின் அடிவருடியாக செயற்பட்ட ஐ.தே.க கட்சியின் சுன்னாகம் பிரதேசசபை உறுப்பினர் சுரேஸ்குமார் அக் காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் மூலம் பெருமளவு பணத்தை குவித்திருந்தான். இவரது கிடுகு வேலி வீடு மதில் வீடாகியதும், இவர் புதிய கார் வாங்கியதும், தனக்குத் தானே தங்க ஆபரணங்கள் அணிந்ததும் ஐ.தே.க காலத்தில் நடந்து முடிந்திருந்தது.

கலாக்காவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து ஐ.தே.கவும் பாதாளத்தில் தள்ளப்பட்ட பின்னர் ஏற்கனவே ருசி கண்டிருந்த பூனையான சுரேஸ்குமார் தற்போதைய உள்ளூராட்சி தேர்தலின் போது தமிழரசுக் கட்சியின் முக்கிய பொம்பிளைக் கள்ளனான பிரகாஸிற்கு ஒத்தாசை புரிந்து சுன்னாகம் பிரதேசசபை வேட்பாளராக போட்டியிட்டான். தான் வெல்ல வேண்டும் என்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த காவாலிகளுக்கு சாராயம் கொடுத்து வசியப்படுத்தியும் தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனையில் நின்றவர்களுக்கு நுாற்றுக்கணக்கான பணிஸ்கள் வாங்கிக் கொடுத்தும் பல்வேறு செப்படி வித்தைகள் செய்து தனது வட்டாரத்தில் பிரதேசசபைக்கு தெரிவாகியிருந்தான்.

சுன்னாகம் பிரதேசசபை உட்பட்ட உள்ளூராட்சி சபைகள் இன்னும் உத்தியோகபூர்வமாக செயற்படாத நிலையில் இருக்கும் போது சுன்னாகம் நகரத்தில் உள்ள மத்திய சந்தைக் கட்டடத்தில் செயற்படும் புடவைக்கடைகளிடம் லஞ்சம் பெற்று அவர்களுக்குச் சார்பாக திருவிளையாடல் ஒன்றை நடாத்தி முடித்துள்ளான். குறித்த புடவைக்கடைகளை நடாத்துபவர்கள் தமது கடைகளின் எல்லைகளுக்கு அப்பால் குறித்த கட்டடத்தில் இயங்கி வரும் பிரதேசசபை உப அலுவலக பகுதிக்குள்ளும் தமது பொருட்களை போட்டு விற்பனை செய்து வந்துள்ளார்கள். இந் நிலையில் குறித்த பகுதியில் தமது ஊழியர்களுக்கான வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கு பிரதேசசபை ஆயத்தமான போது புடவைக்கடைக்காரர்களிடம் லஞ்சம் பெற்ற சுரேஸ்குமார் அக் கடைக்காரர்களுடன் சேர்ந்து நின்று குறித்த தரிப்பிடம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் தான் பதவிக்கு வந்ததும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என பிரதேசசபை உப அலுவலக அதிகாரியை அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது.

அத்துடன் தான் சொன்னால் சுமந்திரன் என்ன வேண்டுமானாலும் தனக்காக செய்வார் எனவும் தன்னை மீறி இங்கு பிரதேசசபை உத்தியோகத்தர்கள் செயற்பட நினைத்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று அவர்களை பதிவியிலிருந்து துாக்கி எறியவும் முடியும் எனவும் புடவைக்கடைக்காரர்களிடம் வடிவேலு போல் வீரவசனம் பேசிய பின்னரே குறித்த வாகனத்தரிப்பிடத்தை அமைப்பதற்கு அவர்களுடன் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளான்.

இருப்பினும் சுரேஸ்குமாரின் வெருட்டல்களுக்கு அடிபணியாத குறித்த அதிகாரி பொலிசாரிடம் முறையிட ஆயத்தமான போது சுரேஸ்குமார் அங்கிருந்து வடிவேலு பாணியில் நழுவி ஓடித்தப்பியதாகத் தெரியவருகின்றது. சுரேஸ்குமார் மற்றும் புடவைக்கடை வியாபாரிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது குறித்த வாகனத்தரிப்பிடம் தற்போது அமைக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் குறித்த வாகனத்தரிப்பிட வேலை நிறைவு பெற்று பிரதேசசபையிடம் கையளிக்கப்படும் என ஒப்பந்தகார் தெரிவித்துள்ளார்.