புதினங்களின் சங்கமம்

நல்லுார் கோவிலுக்கு அருகில் பின் வீதியில் கந்தன்கருணை வீட்டுக்கு அருகில் விபச்சார விடுதி!!

நல்லுார் பின் வீதியில் உள்ள கந்தன்கருனைக்கு அருகில் DJ GUEST HOUSE என்ற பெயருடன் விபச்சார விடுதி ஒன்று செயற்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பகுதி மிகவும் அமைதியானவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதி என்பதுடன் நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப்பகுதிக்கே அறிமுகமில்லாத மிகவும் தரங்கெட்ட செயற்பாடுகளைக் கொண்ட காவாலிகள் சிலரே குறித்த வீட்டை தற்போது பொறுப்பெடுத்து அதனை விடுதியாக்கியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். செத்தவீடுகளுக்கு பறை மேளம், பான்ட் வாத்தியங்கள் அடிப்பவர்களும் அங்கு வந்து நிற்பதாகவும் இரவு வேளைகளில் அந்த வீட்டில் பெண்கள் சினுங்கும் சத்தங்கள் கேட்பதாகவும் அயல் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். யாழ் மாநகரசபையின் துப்பரவுத் தொழிலாளிகளின் தலைவனாக செயற்படும் ஒருவனே குறித்த விடுதிக்கு பெண்களை சப்ளை பண்ணி வருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தேகிக்கின்றார்கள். யாழ் மாநகரசபை இந்த விடுதியை இயங்குவதற்கு எவ்வாறு அனுமதி கொடுத்தது என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.