அமெரிக்காவில் பசில் விபத்துக்குள்ளாகி கழுத்தில் காயமாம்!! மாத்தறை நீதிமன்றில் தகவல் கூறியது யார்?
அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனை தொடர்பில் இடம்பெற்ற வழக்கின் போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மாத்தறை நீதவான் அருண புத்ததாசவினால் நேற்று (23) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பகுதியில் 50 மில்லியனைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த வழக்கு இடம்பெற்றிருந்தது.
குறித்த நிலத்தை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் முன்னதாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான போதிலும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில் வழக்கின் மனுதாரர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பின்வரும் உண்மைகளை நீதிமன்றுக்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

