புதினங்களின் சங்கமம்

18 வயது கணவன், 15 வயது மனைவி; குழந்தை பிரசவம்: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில் 15 வயதான சிறுமியொருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சிறுமி, பிறந்து 12 நாட்களேயான குழந்தையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆராய்ந்த போதே, குழந்தை பிரசவித்து 12 நாட்களான 15 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

18 வயதான இளைஞன் ஒருவருடன் சிறுமி குடும்பம் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.