புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் 29 வயது பட்டதாரி ஜெயரூபன் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தை சேர்ந்த 29 வயதான தில்லைநாயகம் ஜெயரூபன் என்ற இளைஞன் தனது வீட்டின் அறையில் இன்று அதிகாலை ( 20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவயதில் தாய் தந்தையரை இழந்து வாழ்ந்து வந்த பட்டதாரியான இவ் இளைஞனின் திடீர் மரணம் அம்பிளாந்துறை கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of 7 people