புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி.

அன்பான முகநூல் உறவுகளே!
இது ஒரு எச்சரிக்கை செய்தி.
STING என்றொரு குளிர்பானம் என்னால் யாழ்ப்பாணத்தில் பல கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கப்பட்டுள்ளது. எத்தனையோபேர் உங்கள் சிறு குழந்தைகளுக்கும் வாங்கி கொடுத்திருப்பீர்கள் . அப்போத்தலின் லேபலில் குறிப்பிடப்பட்டுள்ளதை வாசித்துள்ளீர்களா??? Not recommended for children under 12 years and prägnant and lactating Women என்றவாறாக உள்ளது. ஆனால் கடைகளிலே ஒரு சின்னப்பிள்ளை போய் மாமா எனக்கு sting soda தாங்க எண்டதும் வயதைப் பார்த்தா கொடுக்கப் போகிறார்கள்!!!
கடைகளிற்கு சென்று அது பிழை இது பிழை என்று குறை காணும் சுகாதாரப் பரிசோதகர்களே! இவ்விடயம் போத்தலில் ஆங்கிலத்தில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் கடைகளிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதை விடுத்து முதலில் கடை உரிமையாளர்களிற்கும் பொது மக்களிற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பிறகு கம்பனிக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யுங்கள் ஏனெனில் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களமே அதிகம் பேசும் மொழிகளாக உள்ளன. அப்படியிருக்க ஆங்கிலத்தில் மாத்திரம் அறிவுறுத்தல் இட்டிருக்கிறார்கள். சிகரெட் பெட்டியிலேயே மூன்று மொழியிலும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். சிறுபிள்ளைகள் விரும்பி பருகும் குளிர்பானப்போத்தலில் மாத்திரம் ஏன் இந்த அசிரத்தை!!!!
மக்களே விழிப்படையுங்கள் !!!
தகவலுக்கு நன்றி சகோதரன் முரளி.

May be an image of drink and textMay be an image of chocolate bar and textMay be an image of drink, medicine and text