யாழ் நீதிமன்றத்திற்கு டக்கர் வந்தது ஏன்?
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட 500 மில்லியன் ரூபா நஸ்ட ஈடு கோரிய மானநஷ்ட வழக்கின் முன்விளக்க கலந்துரையாடல் இன்றையதினம் (19.05.2025) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி எஸ். சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்றது.
‘தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவராக்க அரசு முயற்சிப்பதேன்? – நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி கேள்வி’ என்ற தலைப்பில் 2012.11.07 ஆம் திகதியன்று உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி, தனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட பொய்யான செய்தி என்பதை சுட்டிக்காட்டி டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த பத்திரிகை நிறுவனத்துக்கு எதிராக 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரிய மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.


