புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் தனக்கு வாக்களிக்காத மூதாட்டிக்கு கொடுப்பனவு வழங்காது துரத்தி விட்ட அஞ்சல் உத்தியோகத்தர்.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு எடுக்கச் சென்ற முதியோர் ஒருவரை கொடுப்பனவு தர முடியாது என துரத்தி விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று (14) காலை முதியோர் கொடுப்பனவு எடுக்கச் சென்ற முதியவர் கொடுப்பனவுக்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரை நேரம் செல்லுது என்னை மிக விரைவாக அனுப்பும் படி கேட்டபோது அங்கு நின்ற முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரும் மற்றும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான நபர் அந்த முதியவரை தமக்கு வாக்குப் போடவில்லை எனப் பேசி உள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் தற்போது அஞ்சல் அலுவலக உத்தியோகத்தராக இருக்கும் நபரிடம் சென்று முதியவருக்கு கொடுப்பனவு கொடுக்க வேண்டாம் என கூறி சென்றுள்ளார்.

இதன்பின் தற்போது உத்தியோகத்தராக இருக்கும் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்ற குறித்த முதியவரை பல கீழ்த்தரமான வாத்தைகளை பயன்படுத்தி பேசியும் முதியோர் கொடுப்பனவு அட்டையினை தூக்கி எறிந்து தனது சுயநல கோபத்தினை வெளிப்படுத்தி உள்ளார் அஞ்சல் உத்தியோகத்தர்.

ரூபா 250ற்காக 2km பயணம் செய்து வந்த முதியவர் தனது வாக்கினை குறித்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரருக்கு போடவில்லை என அவமானப்படுத்தி அனுப்பி சென்ற சம்பவம் தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? இவ்வாறே தொடர்ந்து நடைபெறப்போகிறதா? என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.