யாழ் காரைநகரில் கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!
யாழ்ப்பாணம் காரைநகரில் கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் ஆண் ஒருவரின் சடலம் காரைநகர் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியிருந்தது.
குறித்த சடலம் குறித்து விசாரித்தபோது சடலமாக கரையொதுங்கியவர் தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் என்று தெரியவந்துள்ளது.
குறித்த மீனவர் அண்மையில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தவறி கடலில் வீழ்ந்து காணாமல் போயிருந்தவர் என்று அங்கிருந்து செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சடலத்தை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

