புதினங்களின் சங்கமம்

வட மாகாணத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளிலும் கடமையில் அதிபர்களா?

வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆளணி முகாமைத்துவக் குறைபாட்டின் மற்றுமொரு வெளிப்பாடு அதனுடைய கல்வி முகாமைத்துவ தகவல் அமைப்புக்கான இணையத்தளத்தின் தரவுகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் தற்போது 84 தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் உள்ளன. இதில் 07 பாடசாலைகளுக்கு அதிபர்கள் தற்போதும் கடமையாற்றுவதாக சம்பளம் பெறுகின்றனர். இதில் ஆசிரியர் தரத்தில் உள்ள 05 அதிபர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு ஆசிரியர் தரத்திலுள்ளவர்களையும் அதிபர்களாக மூடப்பட்ட பாடசாலைகளுக்கு நியமித்து அவர்களுக்கு அதிபர் தரத்திலுள்ள சலுகைகளை வழங்க வேண்டியதன் தேவை என்ன? இதில் உள்ள ஊழல்களை சமூகப் பொறுப்பிலுள்ள உயரதிகாரிகளும் ஏனைய சமூக நலன் விரும்பிகளும் வெளிக் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

No photo description available.No photo description available.No photo description available.