நேர்மையான அதிகாரிகளை குறி வைத்து திருகுதாளத்தை ஆரம்பித்த வைத்திய அதிகாரிகள் சங்கம்.
தெல்லிப்பழை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் தேவநேசனுக்கு எதிராக யாழ் மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது திருகுதள வேலையை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் குறித்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை வேறு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வீட்டார் முயற்சித்தபோது குறித்த வைத்தியசாலையின் விடுதி வைத்தியர்களுடன் முரண்பாடு ஏற்பட்டது.
குறித்த பெண்மணியின் உறவு வீட்டுக்காரர் குறித்த விடுதியில் ஒழுங்கான சிகிச்சை வழங்கப்படவில்லை என தெரிவித்து நோயாளியை விடுவிக்குமாறு கேட்ட நிலையில் வைத்தியர்கள் சம்மதிக்கவில்லை.
இன் நிலையில் குறித்த நோயாளியின் உறவினர்கள் அரசியல் பலத்தை பிரயோகித்து நோயாளியை அங்கிருந்து மீட்டுச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த சில வைத்தியர்கள் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியரான தேவநேசனை குறித்த நோயாளியின் உறவினர்களுக்கு எதிராக போலீஸ் முறைப்பாடு செய்யுமாறு வற்புறுத்தி வரும் நிலையில் அதற்கு தேவனேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தேவனேசனின் போலீசுக்கு முறைப்பாடு செய்யாமைக்கான காரணத்தை வைத்தியர்களுக்கு தெளிவுபடுத்திய நிலையில் அவர்கள் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவியுடன் தேவநேசனுக்கு எதிராக பல சதி முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.
வைத்தியசாலை விடுதியில் இடம்பெற்ற பிரச்சனை தொடர்பில் பொறுப்பு வைத்தியர் தேவனே எனக்கு உரிய நேரத்தில் வைத்தியர்கள் தெரிவிக்காமல் விட்டது முதலாவது தவறு.
அதே நேரத்தில் நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் அவரை வேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை இவை இரண்டும் வைத்தியசாலை விடுதி வைத்தியர்களால் மீறப்பட்ட சம்பவமாகும்.
இதன் பின்னணியில் தேவனேசன் பொலிஸ் முறைப்பாட்டை செய்ய முடியாது என மறுத்துள்ளார்.
வைத்தியர் தேவனேசனை பொருத்தவரையில் ஒரு நேர்மையான அதிகாரி என்பது பல வைத்தியர்களுக்கு நன்கு தெரியும்.
இறுதிப்போர் காலத்தில் நோயாளிகளை கொழும்புக்கு அனுப்புவதில் இருந்து மீண்டும் அவர்களை அழைத்துவரும் செயற்பாட்டை அவர் நேரடியாக கவனித்து வந்தார்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சை தொகுதி தடங்கல் ஏற்படா வண்ணம் செயற்படுவதற்கு மின்பிறப்பாக்கியை கொழும்பிலிருந்து எடுத்து வந்ததும் இந்த தேவ கணேசன் தான்.
இறுதியாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி வைத்திய அதிகாரியாக நிர்வாக விடையங்களை முறைகேடுகள் இன்றி செயல்படுத்திய தேவனேசன் கடந்த வருடம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக கடமைகளை பொறுப்பேற்றார்.
இவ்வாறு நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை தமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லையாயின் அவர்களுக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக போர்க்கொடி தூக்கி வருவதை அவதானிக்க முடிகிறது.


