புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றவர்களின் திருவிளையாடல்கள் ( தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்)
இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு … எல்லோருக்கும் அல்ல…………. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்……
_ஆரம்பம் ….
இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!
1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..
(அவங்க சுத்தமாம்!)
2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)
3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)
4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).
5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!
6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)
7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).
8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய
எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்………
நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க
9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று……ஆனால் நிலமை வேற கண்ணா………!
10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோ