யாழில் வெளியாகிய உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் சில!! சைக்கிள் யாழ் மாநகசபையில் முன்னிலை! மான் நல்லுாரில்!! வல்வெட்டித்துறை சிவாஜியிடம்!!
எமக்கு கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி அடிக்கடி நாம் இந்தப் பெறுபேற்று தகவலை இந்த இணைப்பிலேயே மாற்றிக் கொண்டிருப்போம்.. ஆகவே அன்பு வாசகர்களே இந்த இணைப்பை அடிக்கடி மீள் கிளிக் செய்து பார்வையிடவும்.
2025 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், யாழ் மாநகரசபையில் இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை வகிக்கிறது.
தற்போது வரை 8 வட்டாரங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது. 1 வட்டாரத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும், 1 வட்டாரத்தை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன.
நல்லூர் பிரதேசசபையில் இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையை ( சுன்னாகம்) தமிழரசுக் கட்சி கைப்பற்றியது!
கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தன்வசப்படுத்தியிருக்கிறது.
கரைச்சி 21 இல் 20 ![]()
பூநகரி 11 இல் 10 ![]()
பளை 8 இல் 6 ![]()
சைக்கிள் 5-வீடு 3 சங்கு 1
மொத்த ஆசனம் 15
(போனஸ் 6)
வீடு 13 – சைக்கிள் 04
சங்கு 01
மொத்த ஆசனம் 19
.வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் இதுவரையான முடிவுகளின்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை 5 வட்டாரங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளது. 5 வட்டாரங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது. 4 வட்டாரங்களில் தமிழ் அரசு கட்சி 2வது இடத்தையும், 1 வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தி 1 வட்டாரத்தையும் கைப்பற்றியுள்ளது.
வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை பிரதேசசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதிக்கம் காணப்படுகிறது.
வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேசசபையில் இதுவரையான நிலவரப்படி இலங்கை தமிழ் அரசு கட்சி 12வட்டாரங்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 5 வட்டாரங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 வட்டாரத்தையும் வென்றுள்ளன.
பருத்தித்துறை நகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி 5 வட்டாரங்களை வென்றுள்ளது.
பருத்தித்துறை பிரதேசசபையில் இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசு கட்சி 7 வட்டரங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, சுயேச்சை (அணில்) தலா ஒவ்வொரு ஆசனத்தையும் வென்றுள்ளன.

