புதினங்களின் சங்கமம்

தன்னைத்தானே சுட்டு உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்..!

அம்பாறை மாவட்டம், பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தன்னிடம் கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (மே 6) அதிகாலை 5.15 மணியளவில், பதியதலாவ பொலிஸ் நிலைய காவலர் குடியிருப்பில் இந்த தற்கொலை நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கியாக டி-56 ரக ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர், 59 வயதுடையவர் என்பதுடன், பிபிலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதியதலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.