யாழ் அல்வாய் கம்பர்மலை பகுதியில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு – மக்கள் சோகத்தில்
யாழ்ப்பாணம், அல்வாய் கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாஸ்கரன் பரந்தாமன் என்ற இளைஞர், நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் கம்பர்மலை பகுதியில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெறும்போது அவர் நண்பர்களுடன் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இறப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

