மாப்பிளை வெளிநாட்டில்!! யாழில் புதுமணப் பெண் தற்கொலை முயற்சி!!
வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த இளைஞனுக்கும் பெரியோர்கள் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் கனடாவுக்கும், பெண் யாழ்ப்பாணத்துக்கும் சென்றனர், அத்துடன் இளைஞனுக்கு பெண்னின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதன் பின்னர் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், யாழில் தற்போது வசித்து வரும் பெண் வீட்டில் உள்ள அறையொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியதாக உறவினர் ஒருவர் முகநூலில் பகிர்ந்துள்ளார்.