புதினங்களின் சங்கமம்

யாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் பாய்ந்ததால் பரபரப்பு!!

யாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த போது பாடசாலைப் பகுதியில் பொலிசார் சென்று தேடுதல் நாடாத்தியுள்ளனர். அங்கு பொருத்தியிருந்த கமராவில் பதிவாகிய காட்சிகளையும் பொலிசார் பார்த்துள்ளதுடன் பாடசாலையும் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.