புதினங்களின் சங்கமம்

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய!! உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மகிந்த!!

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர்
மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்
முதலாவது தேசிய மாநாடு ஆரம்பமானது. இந்த மாநாட்டில், கட்சியின் தலைவராக மகிந்த
ராஜபக்ச அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து தலைமை உரையை அவர் வழங்கினார்.

மாநாட்டில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, சரியாக 4 மணிக்கு, கோத்தாபய ராஜபக்சவை
வேட்பாளராக நிறுத்துவதாக அறிவித்தார்.

அப்போது, திடீரென மாநாட்டில் பங்கேற்றிருந்தவர்கள் ஒரே நேரத்தில் பெரும் கரகோசம் எழுப்பி,
கோத்தாபய ராஜபக்சவின் படங்களை உயர்த்திப் பிடித்தனர்.

இதையடுத்து, கோத்தாவை வரவேற்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. உடனடியாக கோத்தாபய ராஜபக்ச
மேடையில் மகிந்தவுடன் காட்சி அளித்தார்.