மஹிந்தவை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் !!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று காலை முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கவுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



