Home புதினங்களின் சங்கமம் அரசுடமையாக்கப்பட்ட தங்கத்தை விடுதலை செய்த சுங்க திணைக்கள அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

அரசுடமையாக்கப்பட்ட தங்கத்தை விடுதலை செய்த சுங்க திணைக்கள அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் சுங்க திணைக்களத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தஹிரு சேய தூபியில் பதிப்பதற்காக அரசுடமையாக்கப்பட்ட 8 கிலோ தங்கத்தை விடுதலை செய்தமை தொடர்பில் இவர்கள் இருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான்ரங்க திஸாநாயக்க நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த இருவரையும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறும் அதனை உடனடியாக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறுமட் உத்தரவிடப்பட்டுள்ளது.