ஆபாசப்படங்களில் வருவது போல் உறவு கொள்ளவில்லை என விவாகரத்து கோரிய மனைவி!! நடந்தது என்ன?
திருமணம் முடிக்க உள்ள, முடித்த அனைவருக்கும் சமர்ப்பணம்.
சமூக நலனைக் கருத்தில் கொண்டு இந்த தகவலை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பினை உங்களிடம் விட்டு விடுகிறோம். வயது முதிர்ச்சியடைந்த யதார்தார்த்ததை உணர்ந்த அனைவரும் இதனை முடிந்தவரை செயார் செய்யவும்.
இது போன்ற விடயங்களை எங்கு கண்டாலும்share செய்யவோ commentsவெக்கவோ தயங்க வேண்டாம்.
திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றம் வரை வந்திருந்தாள் அவள், இத்தனைக்கும் இது அவள் விரும்பிய படி, தேடி தேடி கண்டு பிடித்த மாப்பிள்ளை.
விவாகரத்து கேட்டு அவள் முன் வைத்த காரணங்கள் இவை தான். தன் கணவனால்,
# படங்களைப் போல் நீண்ட நேரம் உறவில் ஈடு பட முடியது
# 4-5 நிமிடங்களே அவரால் உறவில் ஈடு பட முடிகிறது.
# திருமனம் பேசி வைத்த காலங்களில் மணிக்கனக்கில் போனில் அப்படி செய்கிறேன், இப்படி செய்கிறேன் என கதை அளந்து விட்டு இப்பொழுது எதுவும் கிடையாது.
ஆகவே என்னால் இவனுடன் வாழ முடியாது என்று அனல் தெறிக்கும் ஆங்கிலத்தில் தனது ஆதங்கங்களை அவள் கொட்டித் தீர்த்தாள்.
விடயத்தின் விபரீதத்தை உணர்ந்த நீதிபதியும், அவர்கள் இருவரையும் #கவுன்சிலிங் செய்யும்
பெண் ஒருவரின் ஆலோசனையை பெற அனுப்பி வைத்தார்.
மறு நாள் அவர்கள் இருவரும் கவுன்சிலரை சந்தித்தனர்,
சர்வதேச பாடசலையில் கல்வி கற்ற அவள், சாதாரண தரம் படிக்கும் போது (16 வயது) , அவளது தோழிகள் 5 பேருடன் சேர்ந்து தனது வீட்டில் குரூப் ஸ்டடி (Group study) செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவர்களோ படிக்கும் நேரத்தை விட அதிகமான நேரத்தை அந்த அறைக்குள் ஆபாசப்படம் பார்ப்பதிலேயே கழித்துள்ளனர், என்ற அதிர்ச்சியான விடயத்தை அந்த கவுன்சிலர் சகோதரி கண்டறிந்து விட்டார்.
அத்தோடு முடிந்து விடாமல் தினமும் ஆபசக் கதைகள் வாசிப்பது, அதைப் பற்றியே அடிக்கடி அரட்டையடிப்பது, Phone இல் Chatting செய்வது என்று தமது பாடசாலை காலத்தை கழித்துள்ளனர்.
இந்த பிழையான பழக்கங்களால், இதுவே நிஜம், இப்படித் தான் என் வாழ்வும் இருக்கும், எனக்கும்.இப்படி எல்லாம் நடக்கும் என்று தாம்பத்திய வாழ்க்கை பற்றி முற்றிலும் தவறாகவே அவள் விளங்கி கற்பனைகள் செய்து வைத்திருந்தாள்.
பாடசாலை முடிந்து சிறிது காலத்தில் அவளது தோழிகளில் இருவர் திருமணம் செய்துள்ளனர். அவர்களும் தமது அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி அவர்கள் 5 பேரையும் மாத்திரம் கொண்ட குருப் செட் களிலும் (Group chat), குருப் கோலிலும் (Group Call) ,அடிக்கடி கதைப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
தமது தம்பாத்திய வாழ்க்கை படங்களைப் போன்றே போவதாகவும், 40-50 நிமிடங்களுக்கு மேல் தமது கணவன்மார் தம்முடன் உறவு கொள்வதை மாத்திரம் செய்வதாயும், எப்படியும் 1-2 மணி நேரம் ஒவ்வொரு தடவையும் உறவு கொள்வதாகவும் கதை அளந்து விட்டிருந்தனர்.
தமது தோழிகள் செல்வதை மந்திர வாக்காக மனதில் பதியவைத்து, தாம்பத்தியம் பற்றி பல அளவு மீறிய கற்பனைகளை அவளது மனதில் வளர்த்து வைத்திருந்தாள்.
போதக் குறைக்கு கல்யாணம் பேசி வைத்திருந்த காலத்தில் அவளது கணவன், போனில் கதைக்கும் போது ஒவ்வொரு இரவும் தவறாது போன் செக்ஸ் (Phone sex) செய்வதும், அதில் மணிக் கணக்கு அப்படி செய்கிறேன், இப்படி செய்கிறேன் என்று கற்பனையில் கண்டபடி அள்ளி விட்டு அவளது ஆசையில் இன்னும் எண்ணெய் ஊற்றி தீயை ? வளர்த்து கடைசியில் மோசம் போய்க் கிடந்தார்.?
திருமணம் முடித்த புதிதில் ஒரு ஆண் ,
# தன் மனைவியை நெருங்கும் போதோ, கவர்ச்சியாக பார்க்கும் போதோ கூட உச்சத்தை அடைந்து விடலாம்.
#சில சமயம் அவர்களால் வெறும் 20-30 செக்கன்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் செல்லலாம்.
#படங்கள் செயற்கையான, உடலுக்கு ஆபத்தான உற்கொள்ளும்/ வெளியில் பாவிக்கும் மருந்துகளை பாவித்தே எடுக்கப்படுகிறது.
#இணையத்தில் இருக்கும் கதைகள், பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு தனி மனித கற்பனையில் வந்த விடயங்கள்.
#விளம்பர நோக்கத்தை கொண்டு, இயற்கையாக ஒரு மனிதனால் 3-5 நிமிடங்கள் செய்யக் கூடிய விடயத்தை,நோய் என்று நம்ப வைப்பதற்காக பல விளம்பரங்களையும், கதைகளையும், மருத்துவக் குறிப்புகளையும் யூ டியூப், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் உளாவ விட்டுள்ளனர்.
#உங்கள் கணவருக்கு எந்தக் குறையோ, நோயோ கிடையாது, அவர் ஆரோக்கியமாக தான் உள்ளார்.
போன்ற பல விடயங்களை படிப்படியாக அவளுக்கு உணர வைத்து, ஓரளவு தெளிவினைக் கொடுத்தாலும், தோழிகள் மீதிருந்த அதீத நம்பிக்கை காரணமாக அவளது மனம் அதனை முழுதாக ஏற்கமருத்தது.
# என் தோழிகள் பொய் கூறவே மாட்டார்கள்.
# நாங்கள் பகிர்ந்து கொள்ளாத விடயமே கிடையாது.
# அவர்கள் மணிகணக்கில் அப்படி செய்தோம், இப்படி.செய்தோம் என்று என்னிடம் தனியாகவும், குரூப்பிலும் கதைத்துள்ளனர்,
நீங்கள் என்னை கன்வீன்ஸ் செய்து வாழ வைக்க முற்பட வேண்டம்.என்று மீண்டும் முருங்கை மரமே துனை என்று விட்ட இடத்திற்கே வந்து நின்றாள்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக,
அவளது தோழிகள் இருவருக்கும் அவர்களது கணவன்மார் இல்லாத நேரம் பார்த்து தனித்தனியாக தொலைபேசியில் கதைக்க வேண்டும்,
அதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி கவுன்ஸிலிங் செய்யும் சகோதரி அவளுக்கு கூற,
( இதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்தாலும் பின் அதற்கு உடன்பட்டு), அவர்களில் ஒருவர் வியாபார நோக்கில் வெளி நாடு சென்றிருப்பதாகவும், மற்றையவர் கடையில் இருக்கும் நேரம் என்பதாலும் உடனடியாக அழைப்பை எடுத்துக் கொடுத்தாள்.
அழைப்பை எடுத்துக் கொடுத்ததும், அந்த வைத்தியர் தனக்குரிய பானியில், நடந்த விடயத்தை சுருக்கமாக கூறி, அவர்களை தன் வழிக்கு நிதானமாக வரவழைத்து,
“உங்கள் நன்பியின் வாழ்க்கைக்காக நீங்கள் ஒரு உண்மையை அவளிடம் சொல்லியே ஆக வேண்டும், அவள் விவாகரத்து வரை வந்து நிற்கிறாள், உங்கள் தாம்பத்திய வாழ்வைப் பற்றி அவளிடம் கூறி வைத்துள்ள பொய்களை இன்று மாலைக்குள் வெட்கத்தை விட்டு கூறி விடுங்கள், அதே போல் இதன் பிறகு இப்படியான விடயங்களை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்வதையும் விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பின் தோழிகள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இரண்டு வருடங்களாக அளந்த பொய் கதைகளை தனித்தனியே அவளிடம் கூறி,
# அவளது கணவனைப் போல் தான் தமது இல்லறவாழ்வும் செல்கிறது.
# மணிக்கனக்கு நடப்பது என்றெல்லாம் நாம் கூறியது பொய்,
#வெட்கம் தம்மை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் போன்ற காரணங்களுக்காக தான் அப்படி சொன்னோம் என்று கூறி முடித்ததன் பின்னர், படிப்படியாக கவுன்ஸ்லிங்கின் உதவியுடனும் நிதானத்தை அடைந்து இன்று அவள், அவனுடன் ஒரு பிள்ளைக்கு தாயாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்
# விவாகரத்து வரையில் சென்ற இந்த விடயத்தை சுமார் மூன்றரை மாதங்கள் நிதானமாக கையாண்டு, படிப்படியாக உண்மைகளை வரவழைத்து சரியான தீர்வைப் பெற கவுன்ஸிலிங் செய்த அந்த சகோதரி,
# இத்தனை அவமானங்களையும் மிக.நிதானமாக பொறுமையாக கையாண்டு, தன் அன்பினையும், தான் குறையற்ற ஆண் என்பதையும் வெளிப்படுத்திய அந்தக் கனவனையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக!
# பெண்கள் இல்லறத்தில் ஈடுபாடு காட்டுவதில் எந்த பிழையும் கிடையாது. ஆனால்,
# பிள்ளைகள் படிக்கும் போதோ தொலை பேசி, இனையம் பாவிக்கும் போதோ அதனை அவதானிக்காமல் விடுவதும்,
# தாம்பாத்திய வாழ்வைப் பற்றிய அறிவினை அவர்களுக்கு உரிய வயது வரும் போது தெளிவாக கற்றுக் கொடுக்காமல் போவதும்,
# தாம்பத்திய வாழ்வு பற்றிய சரியான அறிவினை ஆண்.பெண் இருவரும். முறையான விதத்தில் சரியாக கற்றுக் கொள்ளாது போவதும்,
# ஆபாசங்களை சர்வ சாதாரணமாக இன்று எங்கும் காணக்கிடைப்பதும்.
# அரை குறை அறிவுடன் Phone sex மற்றும் ஆபாசங்களை கதைப்பதும்,
# இன்னும் பல காரணிகளும் இது போன்ற வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு வழியாக அமையலாம். என்பதை மறக்க வேண்டாம
#அதே போல் இல்லறம் சம்பந்தமான இன்னும் சில சம்பவங்களும் எமது கைவசம் உள்ளது, அவையும் ஆக்கங்களாக இன்ஷா அல்லாஹ் பதியப்படும்.
“தாம்பாத்திய வாழ்வு பற்றிய முறையான அறிவு இல்லாமையும் பல விவாகரத்துகள் நடைபெற காரணமாக அமைந்துள்ளது”
ஏற்றுக் கொள்கிறீரா?
இது பற்றிய இன்னும் சில சம்பங்கள், ஆக்கங்களை வெகு விரையில் பதிவேற்றுவோம். இன்ஷா அல்லாஹ்
நன்றி
முஸ்லீ்ம் இணையத்தளம்….

