20 தூக்க மாத்திரை, தலையணை கீழே ஆணுறைகள் : கணவனை பக்கா பிளான் போட்டு கொன்ற மனைவி!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மும்பையில் உள்ள தானே மிராரோடு கிழக்குப் பகுதியை சேர்ந்தவர் புரொமோத்
பதான்கர். 43 வயதாகும் இவருக்கு தீப்தி மனைவியும் குழந்தை ஒன்றும்
இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு புரொமோத் பதான்கர். அவரது வீட்டில்
சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், புரொமோத் உடலை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர்
தூக்க மாத்திரை உட்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இது தற்கொலையாக
இருக்கலாம் என்று நினைத்த போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது புரொமோத்தின் படுக்கையில், தலையணைக்கு கீழே ஆணுறைகள்
இருந்துள்ளன. இதனால் புரொமோத் நிறைய பெண்களுடன் தொடர்பிலிருந்தவர் என்று
போலீசார் கருதினர். இதுகுறித்து அவரது மனைவி தீப்தியிடம் போலீசார் விசாரணை
செய்தனர். ஆனால் தீப்தி முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவோ சந்தேகமடைந்த
அவர்கள் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அதில், ‘கடந்த 2015ம் ஆண்டு புனேவில் பணி நிமித்தமாக இருந்தபோது,
பாஷங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை புரொமோத் கண்டித்துள்ளார்.
இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தீப்தி, காஃபியில் 20 தூக்க
மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். பின்பு காபி கப்பில் லிப்ஸ்டிக் மற்றும்
தலையணை கீழே ஆணுறைகளை வைத்து அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போல
சித்தரித்துள்ளார். மேலும் கொலை செய்ய கள்ளகாதலுடன் திட்டம் தீட்டிய இவர்,
குழந்தையை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தீப்தி மற்றும் கள்ளக்காதலன் பாஷங்கர் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)