17 வயதுச் சிறுமியை சட்டப்படி கலியாணம் கட்டிய நோர்வே அங்கிள்!! யாழில் சம்பவம்!!
கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் 17 வயதுச் சிறுமிக்கும் 35 வயதான நோர்வே இளைஞனுக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் தொடர்பாக சிறுமியின் ஊரைச் சேர்ந்த அயவலர்கள் சிலர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி திருமணத்தை முடித்து வைத்துள்ளனர் இருதரப்பைச் சேர்ந்த கில்லாடிகளான பெற்றோர். சிறுமிக்கு 17 வயதும் 10 மாதங்களும் இருக்கும் நிலையிலேயே திருமணம் நடந்துள்ளது. அதுவும் தாலிகட்டியதே தவிர பதிவுத்திருமணம் செய்யவில்லை. இதையே காரணம் காட்டி சட்டத்தை ஏமாற்றி மண்டபத்தில் கலியாணத்தை தடல்புடலாகச் செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிறுமியின் அயலவர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கும் போது ”சிறுமி யாழ் புறநகர்ப் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயில்பவர். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியின் வீட்டில் நோர்வேயில் இருந்து வந்தவர்கள் திருமண நிச்சயதார்த்தம் செய்து முடித்திருந்தார்கள். இதனை கேள்விப்பட்டு நாம் சிறுமிக்கு வயது இன்னும் வரவில்லை. இன்னும் 3 மாதங்கள் கழித்து தாராளமாக திருமணம் செய்யலாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தியிருந்தோம். ஆனால் நோர்வேயிலிருந்து வந்த மாப்பிளை மற்றும் அவரது உறவுகள் இது தொடர்பாக அறிவுரை வழங்கிய எமது அயலவர்கள் சிலரது வீட்டுக்குச் சென்று முரண்பட்டுள்ளார்கள். அதன் பின்னர் அயலவர்களான எமக்கே தெரியாது எமது ஊருக்கு 20 கிலோ மீற்றர் தள்ளியுள்ள திருமண மண்டபம் ஒன்றில் தமது உறவுகளையும் நோர்வே நாட்டவர்களின் யாழ்ப்பாண உறவுகளையும் சேர்த்து அங்கு வரவழைத்து சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்கள். குறித்த சிறுமிக்கு மண்டபத்தில் திருமணம் நடக்கின்றது என்பதை அறிந்த நாம் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதம் அன்று திங்கட்கிழமை விடுமுறை நாள் என்றபடியால் அவர்களால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது போய் விட்டது. இருப்பினும் தாலி கட்டிய பின் அங்கு சென்ற பெண் அதிகாரி ஒருவர் குறித்த திருமணம் தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது தாம் சட்டத்தை மதிப்பவர்கள் எனவும் சிறுமிக்கு தாலி மட்டுமே கட்டினோமே தவிர சட்டப்படி திருமணம் செய்யவில்லை எனவும் கூறினார்களாம்….. இது தொடர்பாக சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

