யாழ் தேர்தல் திணைக்களம் திருவிளையாடல் புரிந்ததா? நடப்பது என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்,…
யாழ் தேர்தல் திணைக்களம் மோசடி செய்துள்ளது…
NPP யின் தேர்தல் மோசடி அம்பலம்!
ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்களின் பாரிய மோசடி யாழ் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
வேட்பாளர் ஒருவரின் சத்தியகூற்றின் தவறுக்காக தமிழ் கட்சிகளின் வேட்புமனுக்களை நிராகரித்த யாழ் மாவட்ட தேர்தல்கள் திணைக்களம், NPP கட்சியினரின் வேட்புமனுக்களை ஏன் நிராகரிக்கவில்லை?
NPP யின் யாழ் மாவட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இங்கு மோசடி நடைபெற்றுள்ளது.
NPP யினரின் வேட்பு மனுவின் சத்தியக்கூற்றில் ‘கட்சி செயலாளரின்’ பெயர் முழுமையாக எழுத வேண்டிய இடத்தில் ‘கட்சியின் பெயரை’ எழுதியமைக்கு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளரான ……….. என்றும் இடத்தில் செயலாளரின் பெயர் இடப்பட வேண்டிய இடத்தில் கட்சியின் பெயர் எழுதப்பட்டமை தவறு. அது மட்டுமல்லாமல் சத்திய கூற்றில் கையொப்பமிடுபவரின் பெயரே இடப்பட்டு கையொப்பம் இடப்படவேண்டும்.
அவ்வாறு இல்லையேல் சத்தியக்கூற்று தவறானதாகும்.
சத்தியக்கூற்று தவறாயின் வேட்புமனு நிராகரிக்கப்படிருக்க வேண்டும்.
ஆனால் NPP யின் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லையாயின் இதன் பின்னணி நிச்சயமாக ஊழல் நிறைந்தது என்பதில் சந்தேகமிருக்க முடியாது.
NPP புழுகு மூட்டைகளின் உண்மை முகம் இதுதான்.
தேர்தல் திணைக்களம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
வாக்கு எண்ணும் இடங்களிலும் மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளன.



