புதினங்களின் சங்கமம்

யாழில் ஓ.எல் பரீட்சை விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் நோட்டீஸ் கொடுத்தவர்களை வளைச்சு வளைக்குப் பிடித்த பொலிசார்!! பெற்றோர் மகிழ்ச்சி!

யாழ் நகரப்பகுதியில் ஓ.எல் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு இடையூர் செய்யும் விதமாக தங்களது கல்வி நிறுவனங்களின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று பொலிசாரால் கவனிக்கப்பட்டார்கள். வேம்படி மகளீர் கல்லுாரிக்கு அருகில் நின்று இன்று பிற்பகல் ஓ.எல் மாணவிகள் பரீட்சை எழுதி வெளியேறிக் கொண்டிருந்த போது அங்கு நின்ற இனந்தெரியாதவர்கள் அவர்களுக்கும் அவற்களை ஏற்ற வந்த பெற்றோருக்கும் கட்டாயப்படுத்தி தமது துண்டுப்பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். உடனடியாக அங்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த துண்டுப் பிரசுரங்களைப் பறிமுதல் செய்ததுடன் விநியோகித்துக் கொண்டிருந்தவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரியவருகின்றது. இச் சம்பவத்தால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்ததுடன் பொலிசாரின் சமூகப்பொறுப்பான நடவடிக்கையையும் புகழ்ந்துள்ளார்கள்.