பாடசாலை மதிலைப் பாய்ந்து செல்லும் மாணவிகள்!! வந்தாறுமூலை பாடசாலையில நடப்பது என்ன? வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
கல்குடா வலயத்தில் உள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலே உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு முன் கதவால் செல்லாமல் மதிலுக்கு மேலாலே ஏறிச்செல்லும் காட்சியே இதுவாகும்.
இந்த மாணவர்கள் இவ்வாறு கள்ளக் கதவால் பாடசாலைக்குள் நுழைகின்றார்கள் என்றால், ஏன் இவர்களால் இதே கதவால் பாடசாலை வந்து வெளியே செல்ல முடியாது?
பாடசாலை நேரத்தில் சில பெண் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான சம்பவங்கள் நடைபெற்று சமூக வலைத்தளங்களிலும் பரவியிருந்தது.
இந்த நிலையில் இப்படி ஒரு பாடசாலையில் அதுவும் பெண் மாணவிகள் இவ்வாறு கள்ளக் கதவால் செல்லுமளவிற்கு அங்குள்ள பாடசாலை நிருவாகம் பார்த்துக்கொண்டிறதா?
அங்கு படிப்பிக்கிற வாத்திமார் பார்த்துக்கொண்டிருக்கிறீங்க.
வலயக் கல்வி அலுவலகம் இந்த மாதிரி பாடசாலையில இருக்கிற வாத்திமார முதல்ல வாகரை பக்கம் மாத்த வேணும்.
உடனடியாக வலயக் கல்வி அலுவலகம் இந்தப் பாடசாலை மாணவிகள், அதிபர், உரிய வகுப்பாசிரியர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வீடியோ அன்று பல சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனால் இதனைப் பார்த்து ஏனைய பாடசாலைகளிலும் மாணவர்கள் கள்ளக் கதவுகளால் மதில் ஏறி குதிக்க வாய்ப்புள்ளது.
இந்தப் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
